2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைப்பு

Freelancer   / 2024 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் ஜனாதிபதி அலுவலகத்தை மேற்கோளிட்டு வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷின் மாணவர் அமைப்பினர் பாராளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, இன்று பிற்பகல் 3 மணி வரை காலக்கெடு விதித்திருந்தனர்.

அதன்படி,  இன்று (06) பிற்பகல் 3 மணியளவில் பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷில் அமையவுள்ள இடைக்கால அரசாங்கத்திற்கு நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் தலைமை தாங்க மாணவர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஷேக் ஹசீனாவின் அரசியல் போட்டியாளரான முஹம்மது யூனுஸ், மைக்ரோ கிரெடிட் மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் ஆகிய கருத்துக்களுக்கு முன்னோடியாக 2006 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.

மேலும் இராணுவ ஆட்சியில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று மாணவர் அமைப்பு  வலியுறுத்தியுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .