2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

பங்களாதேஷ் -பாகிஸ்தான் இடையே நேரடி விமான சேவை

Freelancer   / 2025 ஜனவரி 28 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த பங்களாதேஷ் 1971இல் தனிநாடாக சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து, இரு நாடுகளும் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தன. ஆனால் பங்களாதேஷில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இரு நாடுகள் இடையேயான உறவில் சுமூக நிலை காணப்படுகிறது. அதன்படி இரு நாடுகளுக்கும் இடையே நேரடி கப்பல் போக்குவரத்து சமீபத்தில் தொடங்கியது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கான பங்களாதேஷ் உயர் ஆணையர் இக்பால் ஹுசைன் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து தலைநகர் டாக்காவில் இருந்து கராச்சி வழியாக இங்கிலாந்துக்கு விமானத்தை இயக்க வங்காளதேச விமான நிறுவனமான பிமான் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இரு நாடுகள் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என இக்பால் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X