2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

’பங்களாதேஷுக்கு மீண்டும் வருவேன்’

Freelancer   / 2025 பெப்ரவரி 18 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான் பங்களாதேஷுக்கு மீண்டும் வருவேன் எனத் தெரிவித்த பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வேன் எனவும் சவால் விடுத்துள்ளார்.

பங்களாதேஷில், கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்தியாவில் தங்கியுள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என பங்களாதேஷ் அரசு கோரிக்கை விடுத்து இருந்தது.

எனினும் இது தொடர்பாக இந்தியா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவின் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக அவர் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், பங்களாதேஷில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“நான் திரும்பி வருவேன். அதனால் தான் அல்லா என்னை உயிருடன் வைத்து இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வேன். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் நான் உதவி செய்வேன். 

“போராட்டத்தின் போது மக்களை கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெறுவதை உறுதி செய்வேன். முகமது யூனுஸ் ஆட்சி செய்ய தகுதியற்றவர். கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு யூனுஸின் ஆட்சியின் கீழ் நீதி கிடைக்காது” என்றார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X