2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

பங்களாதேஷுக்கு ஆபத்து

Freelancer   / 2025 பெப்ரவரி 27 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் நடக்கும் மோதல் காரணமாக இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு இராணுவ தளபதி வாகர் உஜ் ஜமான் கூறியுள்ளார்.

பங்களாதேஷில் கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது அங்கு முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியில் உள்ளது. 

பங்களாதேஷில் தொடர்ச்சியாக போராட்டங்களும் மோதல்களும் நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டு இராணுவ தளபதி மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

“அதிகாரிகள் வழக்குகளில் சிக்கி இருப்பதால், இளைய அதிகாரிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை அச்சத்தில் உள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால், ஆயுதப்படைகளுக்கு கடமை அதிகரித்து உள்ளது. உடனடியாக மக்கள் ஒற்றுமையுடனும், நிறுவனங்கள் கட்டுப்பாட்டுடனும் பணியாற்ற வேண்டும்.

“மக்கள் இடையே தொடர்ச்சியாக அதிகரித்து வரும் மோதல் காரணமாக நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ச்சியாக உங்களுக்கு உள்ளே சண்டையிட்டு கொண்டு இருந்தால், நாட்டின் சுதந்திரத்துக்கும், ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கிறேன்" என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .