2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பக்தர்களை அலறவிடும் சீன கோயில் : காணொளி

Mayu   / 2024 ஏப்ரல் 22 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் நம் அன்றாட வாழ்வில் கலந்ததிலிருந்து தினம் தினம் புதிதாக ஏதோ ஒரு விடயம் வைரலாகி நம் கவனத்தை ஈர்த்து வருகிறது. உலகின் எந்த மூலையில் இருக்கும் எதோ ஒரு விசித்திரமான விடயங்கள் கூட இணையத்தில் வைரலாவதற்கு அதிக நேரம் எடுப்பதில்லை.

தற்போது அந்த வரிசையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் கோயிலில் இருந்து திரும்பும் மக்கள் கிட்டத்தட்ட கதறி அழுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

சீனாவில் ‘மவுண்ட் தைஷான்’ என்ற இடத்தில் ஒரு கோயில் உள்ளது. இங்கு செல்ல மக்கள் 7,500க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் ஏற வேண்டும். இங்கு ஏறி இறங்கிய பிறகு, ஒருவரின் நிலை, உடலில் இருந்து கால் மறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். முழங்கால்கள் மிகவும் நடுங்கி நிற்க முடியாத நிலையில்  காணப்படுகின்றனர். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்படத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .