Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 29 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் அந்நாடு வெள்ளத்தில் மிதப்பதுடன், பல்வேறு இடங்களிலும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.
நேபாள் தலைநகர் கத்மண்டுவிலும் கொட்டி தீர்த்த கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 112 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மூவாயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 44 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. உள்நாட்டு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் கூறுகையில், “கத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. நேபாள இராணுவம், பொலிஸார், துணை இராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago