2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

நேபாளத்தில் மழையில் பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியது

Freelancer   / 2024 செப்டெம்பர் 30 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்தில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளது.

நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மட்டும் நேபாளத்தின் பல பகுதிகளில் 20 முதல் 30 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. மேலும் பல இடங்களில் வெள்ள நீர் காரணமாக நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.

இதற்கிடையே, கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனமழை நீடிப்பதால் கத்மண்டுவில் ஓடும் பாக்ரி நதியில் அபாய அளவை தாண்டி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தலைநகர் கத்மண்டுவில் 48 பேர் பலியாகினர்.

இந்நிலையில், நேபாளத்தில் இதுவரை கனமழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. 42 பேர் மாயமாகி உள்ளனர். 111 பேர் காயமடைந்துள்ளனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X