Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலிப்பைன்ஸில் நுளம்பை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது. அதில், பொதுமக்கள் நுளம்பை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 நுளம்புக்கு ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிகம் பணம் ஈட்டுவதற்காக வேண்டுமென்றே தண்ணீரைத் தேங்கவைத்து நுளம்புகளை உற்பத்தி செய்யும் அபாயமும் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பிலிப்பைன்சில் இந்த ஆண்டில் மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago