2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

’நிவாரண பொருட்கள் செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை’

Freelancer   / 2025 ஜனவரி 22 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், காசாவுக்கு நிவாரண பொருட்கள் செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை” என்று, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ஐ.நா. அமப்பின் உதவி செய்யும் குழுக்கள், அரசு மற்றும் தனியார் துறைகள் சார்பில் காசாவுக்கு லொறிகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லப்பட்டன.

நிவாரணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் செல்லும் லொறிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகளவிலும், கொள்ளை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆங்காங்கே சிறிய திருட்டுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.

“இஸ்ரேல் - காசா இடையிலான போர் நிறுத்தத்தின் மூன்றாம் நாளில் கிட்டத்தட்ட 900 லொறிகளில் உதவி பொருட்கள் காசாவுக்குள் சென்றுள்ளன.  இது ஒப்பந்தத்தில் கோரப்பட்ட 600 லொறிகளை விட கணிசமாக அதிகம் ஆகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X