Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Mayu / 2024 மே 19 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்த்துக்கல் நாட்டில் நிலவை விட பிரகாசமான விண்கல் ஒன்று வானில் இருந்து பூமியை நோக்கி சென்ற காணொளி சமூக வளைத்த வைரலாகி வருகிறது.
ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்கு இடையேயான வானத்தை ஒரு மாபெரும் விண்கல் கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
குறித்த விண்கல்லினால் பிரகாசமான நீல ஒளிஒளிர்ந்து இரவு வானம் பகல் போன்று காட்சியளித்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில், மணிக்கு 61,000 கிமீ வேகத்தில் சென்ற விண்கல் எவோரா மாவட்டத்தின் ஃபோரோஸ் டி வால்லே ஃபிகுரா பகுதியில் 91 கிமீ உயரத்தில் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அந்த விண்கல் பாறை வடகிழக்கு நோக்கி நகர்ந்து கானோ பாரிஷ் மீது சுமார் 19 கிலோமீட்டர் உயரத்தில் சிதைந்தது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
விண்கற்கள் பொதுவாக விண்வெளியில் உருவாகின்றன. அவை பூமியின் மேற்பரப்பை அடையும் போது சிறிய துண்டுகளாக உடைகின்றன.
அந்த துண்டுகள் வெவ்வேறு அளவுகளில் உடைந்து விழலாம். ஆனால், இப்போது விழுந்த விண்கல்லின் அளவு எதிர்பார்த்ததை விட பெரிதாக இருந்ததாகவும். முதற்கட்ட ஆய்வில் விண்கல் முழுவதுமாக அழிக்கப்படவில்லை என்றும், அதன் ஒரு பகுதி பூமியில் விழுந்தது என்றும் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago