Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 31, திங்கட்கிழமை
S.Renuka / 2025 மார்ச் 25 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்தின் ரிவர்டன் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய மற்றும் பசிபிக் நிலைத்தட்டு சந்திப்பில் அதிக தீவிரமான நிலைமைகள் காணப்படுவதால், ஆஸ்திரேலிய தட்டின் கிழக்கு பகுதி உலகின் மிக அதிக நில அதிர்வுகள் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நியூசிலாந்தில் இதுவரை பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் 1931ஆம் ஆண்டில் ஏற்பட்டது. ஹாக்ஸ் பே பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக மதிப்பீடு செய்யப்பட்டு, 256 உயிரிழப்புகளை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago
2 hours ago