2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

நாடு கடத்தப்பட்ட 65 பேர் கோஸ்டாரிகாவுக்கு வருகை

Freelancer   / 2025 பெப்ரவரி 27 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 65 பேர் கோஸ்டாரிகாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் எல்லை வழியே அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் அந்நாட்டுக்குள் புலம்பெயர்ந்து வருகின்றனர். 

இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதனிடையே, அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்படும் சட்டவிரோத குடியேறிகளை தற்காலிக முகாம்களில் தங்க வைக்க மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா ஒப்புக்கொண்டது. 

அதன்படி, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 16 சிறார்கள் உட்பட 65 பேர், விமானம் மூலம் கோஸ்டாரிகா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்காலிக குடியேறும் மையங்களுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .