Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 05, புதன்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 23 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்கு ஆசியாவில், திருமண சமத்துவத்தை அங்கீகரித்த முதல் நாடான தாய்லாந்து முழுவதும், நூற்றுக்கணக்கான ஓரினச்சேர்க்கை தம்பதிகள் வியாழனன்று (23) திருமணம் செய்துகொண்டனர்.
தாய்லாந்தின் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆண்டு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் கீழ், ஒரே பாலின தம்பதிகள் தங்கள் திருமணங்களை முழு சட்ட, நிதி மற்றும் மருத்துவ உரிமைகள், அத்துடன் தத்தெடுப்பு மற்றும் பரம்பரை உரிமைகளுடன், இனி பதிவு செய்ய முடியும்.
“இந்த திருமணச் சமத்துவச் சட்டம், தாய்லாந்து சமூகத்தின் பாலின வேறுபாடு பற்றிய அதிக விழிப்புணர்வின் தொடக்கத்தைக் குறிக்கிறது. மேலும், பாலியல் நோக்குநிலை, இனம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் அரவணைத்துச் செல்வது - அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கு உரிமை உண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று, அந்நாட்டின் பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா கூறினார். AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago