2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

“நம்மை எதுவும் தடுக்காது”

Freelancer   / 2023 நவம்பர் 27 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி தொடங்கியது. இதில் ஹமாசின் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது.

இதனையடுத்து ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. மேலும், பிணைக்கைதிகளையும் ஹமாஸ் அமைப்பு விடுவித்து வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கட்கிழம (27) காசா பகுதியில் பாதுகாப்புப் படையினரை சந்தித்து பேசியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தளபதிகளுடன் பேசினார் என்றும், பாதுகாப்பு தொடர்பான விளக்கத்தைப் பெற்றார் என்றும் அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில் “எதுவும் எங்களைத் தடுக்காது. போரின் அனைத்து இலக்குகளையும் அடைவதற்கான பலம், சக்தி, விருப்பம் மற்றும் உறுதிப்பாடு எங்களிடம் உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதையே நாங்கள் செய்வோம்,” என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .