2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தேசிய கொடி விற்பனையால் குண்டு வீச்சு: 3 பேர் உயிரிழப்பு

Mayu   / 2024 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் 77வது சுதந்திரதினம் புதன்கிழமை (14) கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சுதந்திர தினத்தையொட்டி பலூசிஸ்தானின் குயூடா பகுதியில் உள்ள கடையில் பாகிஸ்தான் தேசியக்கொடி விற்கப்பட்டு வந்தது.

 அதேவேளை, பாகிஸ்தான் தேசியக்கொடியை விற்பனை செய்ய வேண்டாம் என பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அந்த எச்சரிக்கையை மீறி தேசியக்கொடி விற்பனை செய்த கடை மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .