2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

தீ விபத்து: 17 கார்கள் தீக்கிரை

Freelancer   / 2025 ஏப்ரல் 01 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 கார்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. 

தீவிபத்து ஏற்பட்டபோது விற்பனையகத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், தீ முழுவதும் அணைக்கப்பட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தீ விபத்து குறித்து டீலர்ஷிப் உரிமையாளர் மற்றும் விற்பனையகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, டெஸ்லா கார் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீவிபத்து பயங்கரவாத தாக்குதல் என உலக பெரும்பணக்காரரான எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபகாலமாக இத்தாலி முழுவதும் டெஸ்லா வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. 

கடந்த ஒருவாரத்திற்கு முன்பு வடக்கு ரோமில் உள்ள மற்றொரு கார் டீலர்ஷிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் டெஸ்லா கார்கள் உட்பட 30 கார்கள் எரிந்து சேதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .