2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

திருவிழாவில் குண்டுவீச்சு:மூவர் பலி

Freelancer   / 2024 டிசெம்பர் 15 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில், சனிக்கிழமை (14) இரவு  இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில், மூவர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்தின் தக் மாகாணம், உம்பாங் நகரில் வருடாந்த திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

அப்போது, விழாவில் கலந்துகொண்ட இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் அந்த கூட்டத்தை நோக்கி சிலர் வெடிகுண்டு வீசினர். 

இந்த குண்டுவெடிப்பில், 3 பேர்  பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும்,  பலி எண்ணிக்கை உயரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

 இந்தச் சம்பவம் தொடர்பாக  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X