Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஒக்டோபர் 21 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்டவற்றின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தினமும் ஒருவருக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் நவமபர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசு வேட்பாளராக டிரம்ப்பும் களம் காண்கின்றனர்.
இதில் டிரம்பை ஜெயிக்க வைக்க டிரம்பின் பிரச்சாரத்துக்கு 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளதோடு பிரசாரத்திலும் மஸ்க் ஈடுப்பட்டுள்ளார்.
டிரம்புக்கு குறைந்த வாக்கு வங்கி இருக்கும் மாகாணங்களில் வாக்காளர்களை ஒருங்கிணைத்து, பதிவு செய்வது, அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய அரசியல் நடவடிக்கை அமைப்பு [பிஏசி] என்ற ஒன்றை ஆன்லைன் மூலம் செயல்படுத்தி வருகிறார் எலான் மஸ்க் . இதன்படி துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உள்ளிட்ட அமெரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள சில சட்டங்களுக்கு ஆதரவு திரட்டி படிவங்களில் கையொப்பம் வாங்கும் கையெழுத்து இயக்கத்தைத் ஆரம்பித்துள்ளார்.
இதற்கமைய, நாடு முழுவதும் 10 இலட்சம் கையொப்பங்களை வாங்க வேண்டும் என்ற திட்டத்தில் அவர் உள்ளார். முக்கியமாக பென்சில்வேனியாவில் இந்த திட்டம் தீவிரத்துடன் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த படிவத்தில் கையெழுத்திடும் நபர்களில் தேர்தல் நடக்கும் நவம்பர் 5 வரை தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு 1 மில்லியன் டாலர்கள் [சுமார் 8 கோடி ரூபாய்] பரிசாக வழங்கப்படும் என்று மஸ்க் அறிவித்துள்ளார்.
அதன்படி முதல் அதிஷ்டசாலியாக பென்சில்வேனியாவை சேர்ந்த ஜான் டிரெஹர் என்பவருக்கு 1 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த திட்டத்துக்கு ஜனநாயகவாதிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
4 hours ago
5 hours ago