2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

தாயின் உயிரைக் காப்பற்றிய சிறுவன்; குவியும் பாராட்டு

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 08 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


அவுஸ்திரேலியாவின்  டான்சஸ்டன் நகரைச்  சேர்ந்த ‘மாண்டி காக்கர்‘ என்ற 4 வயது சிறுவன், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட தனது தாயை காப்பாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினத்தன்று மாண்டி காக்கரின் தாய் வலிப்பு நோயால் கீழே விழுந்துள்ளார் எனவும் இதை கண்ட சிறுவன் உடனடியாக தேசிய நெருக்கடி கால எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்சை வரவழைத்துள்ளான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு  வந்த , மருத்துவ பணியாளர்கள் அந்த பெண்ணுக்கு தகுந்த சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில்   சிறுவனின் புத்திசாலித்தனத்தை பாராட்டி தேசிய நெருக்கடி கால சேவை அமைப்பினர் நேற்று முன்தினம்  பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X