2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

தவறுதலாக தாக்கியதில் 30 பேர் பலி

Mithuna   / 2023 டிசெம்பர் 05 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரிய நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ஆயுத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கு எதிராக ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நைஜீரியாவின் வடமேற்கில் உள்ள கடுனா மாகாணம் டுடுன்பிரி கிராமத்தில் இராணுவ டிரோன் ஒன்று தாக்குதல் நடத்தியது.

அந்த கிராமத்தில் பண்டிகை ஒன்றுக்காக கிராம மக்கள் ஏராளமானோர் ஒரு இடத்தில் கூடி இருந்தனர். அப்போது இராணுவ டிரோன் தவறுதலாக கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கிராம மக்கள் கூறும்போது, 30 பேர் பலியானதாகவும், 60 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .