Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 03, திங்கட்கிழமை
Freelancer / 2025 மார்ச் 03 , மு.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரமழான் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து, கடந்த 2023 இல் தாக்குதல் மேற்கொண்டது.
இதில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 200 பேரை பிணைக்கைதிகளாக கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக கடந்த 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசாவில் 48,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அமெரிக்கா மற்றும் ஐ.நா.,வின் முயற்சியால், இரு தரப்பிற்கும் இடையே கடந்த ஜனவரி 19 முதல் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ரமழான் பண்டிகை காலத்தில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் செய்வதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காப் முன் மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago