Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 மார்ச் 29 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியான்மர் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மிகப் பெரிய ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அங்கு வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மியான்மர் தலைநகர் நேபிடாவில் உள்ள 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குப் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மியான்மர் நாட்டில் நேற்று 7.7 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்ட நிலையில், பிறகுச் சற்று நேரத்தில் அங்கு 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அங்கு வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் பூகம்பம் உணரப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் கூட பூகம்பம் உணரப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே மியான்மர் தலைநகர் நேபிடாவில் உள்ள 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை பேரழிவின் மையப் பகுதியாக உருவெடுத்து இருக்கும் என அஞ்சப்படுகிறது. அங்கு எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இல்லை. இருப்பினும், அங்கு அதிக மக்கள் உயிரிழந்து இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதான் அந்த நகரத்திலேயே மிகப் பெரிய மருத்துவமனை என்றும் சொல்லப்படுகிறது
மியான்மர் மட்டுமின்றி தாய்லாந்து நாட்டிலும் பாதிப்புகள் மோசமாக இருக்கிறது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, வடக்கு தாய்லாந்து வரை நிலநடுக்கம் உணரப்பட்டது. அங்கு பாங்காக்கில் சில மெட்ரோ சேவைகள் நிறுத்தப்பட்டன.
மேலும், தாய்லாந்தின் பாங்காக் பகுதியில் அரசு அலுவலகங்களுக்காக 30 மாடிக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டிடம் ஒரே நொடியில் இடிந்து தரைமட்டம் ஆகியிருக்கிறது. அதன் உள்ளே 43 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago