2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

தாய்வானுக்கு ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

Freelancer   / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானுக்கு சுதந்திரம் கேட்கும் பிரிவினைவாத சக்திகளை தூண்டுவதையும் ஆதரிப்பதையும் அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும் என, சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் கடந்த 1949ஆம் ஆண்டில் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தாய்வான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தாய்வான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. 

அதுமட்டும் இன்றி தேவை ஏற்பட்டால் தாய்வானை கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. 

மேலும், தாய்வானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

அதேவேளை, தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தாய்வானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. சீனா படையெடுக்கும் பட்சத்தில் தாய்வானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஆயுத விற்பனையில் அடுத்தகட்டமாக, 385 மில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை, அண்மையில் ஒப்புதல் அளித்தது. அதன்படி போர் விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் ஆகியவை அடுத்த ஆண்டு முதல் விநியோகிக்கப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாய்வானைச் சுற்றி சீனா தனது இராணுவ நடவடிக்கையை அதிகரித்து அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுடனான தனது இராணுவ உறவுகளை விரிவுபடுத்த தாய்வான் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .