2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

தன்னை தானே விவாகரத்து செய்த பிரபலம்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 28 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலை சேர்ந்த மொடல் அழகியான கிறிஸ் கலேரா (Cris Galera)  கடந்த செப்டெம்பர் மாதம் தன்னைதானே திருமணம் செய்துகொண்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

31 வயதான கலேரா கடந்த காலங்களில் உறவு முறிவுகளால் ஏற்பட்ட விரக்தி காரணமாக பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் தன்னை தானே திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் திருமணம் செய்து 3 மாதங்கள் ஆகவுள்ள நிலையில் தற்போது தன்னை தானே விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து மனம் திறந்த அவர் "எனக்கு இப்போது காதல் மீது நம்பிக்கை வந்துவிட்டது. காதல் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன். நான் என்னுடைய கனவு மனிதரை சந்தித்துவிட்டேன்.. அவரை பார்த்தபிறகுதான் இந்த நம்பிக்கை எனக்குள் வந்தது..அதனால், நான் என்னை திருமணம் செய்து கொண்டதை விவாகரத்து செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.

அவரது இந்த அறிவிப்பானது  பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு ஏராளமான கருத்துக்களை இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் அவரது புது காதலுக்கு, தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X