2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

தனிமைச்சிறைக்குள் இம்ரான் கான்

Freelancer   / 2025 மார்ச் 04 , மு.ப. 10:51 - 0     - 14

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. 

பயங்கரவாதிகளை அடைத்து வைக்கும் தனிமைச்சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்க வைக்க சதித்திட்டம் தீடப்படுவதாகவும், அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

சிறையில் உள்ள இம்ரான் கானை, 6 பேர் சந்திக்கலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தபோதும், அவரை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் தெரிவித்துள்ளது. 

மேலும், இம்ரான் கானை சந்திக்க அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X