Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 28 , மு.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் கொரியாவின் பதில் ஜனாதிபதி ஹன் டக்-சூவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அந்த நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி யூன் சூக் யோலிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர் தோல்வியடைந்தார்.
ஜனாதிபதி யூன் சூக் யோல் கடந்த 3 ஆம் திகதி கடுமையான இராணுவ சட்டத்தை அமல்படுத்தியமை காரணமாக அவர் பதவியிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
முன்னதாக தென் கொரியாவில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பினை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை இடைக்கால ஜனாதிபதி ஹன் டக்-சூ மேற்கொள்வார் என பல தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில், பாராளுமன்றத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது குழப்பநிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் நடுவே ஒன்றுகூடி இந்த வாக்கெடுப்பு செல்லாது என கோஷமிட்டுள்ளனர். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago