Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 11 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில், தண்டவாளத்தில் தூங்கிய இளைஞன் ஒருவர் ரயில் மோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
தென் அமெரிக்க நாடான பெரு தலைநகர் லிமாவில் இருந்து பெருவியன் ஆண்டிஸ் நகருக்கு ஒரு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள ஏட் நகர் அருகே சென்றபோது இளைஞன் ஒருவர் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இதனை கண்டதும் ரயிலின் வேகத்தை சாரதி குறைத்தார். எனினும் தூங்கிக் கொண்டிருந்த இளைஞன் மீது ரயில் மோதியது. இதில் சிறிது தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், குறித்த இளைஞனை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்தனர். முதல் கட்ட விசாரணையில் அந்த இளைஞன், போதை தலைக்கேறி தண்டவாளத்தில் படுத்து கிடந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago