Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 11 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசியாவில், தடையை மீறிய அவுஸ்திரேலிய இளைஞர்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்காரா மாகாணத்தில் லோம்போக் தீவில் ரிஞ்சானி தேசிய பூங்கா பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது.
அங்குள்ள ரிஞ்சானி மலை சாகச வீரர்களுக்கு உகந்த இடமாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி அங்கு மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே அவுஸ்திரேலியாவை சேர்ந்த 3 இளைஞர்கள் அங்கு சுற்றுலா சென்றிருந்தனர். சாகச வீரர்களான அவர்கள் தடையை மீறி ரிஞ்சானி மலை மீது ஏறினர்.
இது அங்கிருந்த கண்காணிப்பு கமெரா மூலம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் 3 பேருக்கும் சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரிஞ்சானி தேசிய பூங்காவுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago