2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை

தடைசெய்யப்பட்ட பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணி சுறா தாக்கி பலி

Freelancer   / 2024 டிசெம்பர் 30 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்து கடல் பகுதியில், நீச்சலடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதியை மீறி சென்ற சுற்றுலா பயணி ஒருவர், ஆழ்கடல் பகுதிக்குள் சென்றபோது, சுறா தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

எகிப்து நாட்டின் மார்சா ஆலம் பகுதியில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடல் பகுதியானது பவள பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பீச் ஆகியவற்றுக்காக புகழ் பெற்றது.

இந்நிலையில், இந்த பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகளில் ஒருவர், தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். 

இதன்போது, அவரை சுறா ஒன்று தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், வடக்கு மார்சா ஆலம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சுற்றுலா பயணி நுழைந்து உள்ளார். நீச்சலடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதியை மீறி சென்ற அவர், ஆழ்கடல் பகுதிக்குள் சென்றபோது, சுறா தாக்குதலுக்கு ஆளானார் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் எந்த நாட்டை சேர்ந்த நபர் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு செல்ல  திங்கட்கிழமை (30) முதல் 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2023ஆம் ஆண்டு ஜூனில், மார்சா ஆலம் கடலோர பகுதிக்கு வடக்கே அமைந்த செங்கடல் பகுதியில் ஹர்காடா என்ற இடத்தில் ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவரை புலி சுறா தாக்கியது. இதில் அவர் உயிரிழந்தார்.

கடந்த மாதம் அதே பகுதியில், சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X