2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடனான உறவுகளை தரமிறக்கும் இந்தியா

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாகிஸ்தானுடனான தனது உறவுகளை தரமிறக்குக்கும் பல நடவடிக்கைகளை இந்தியா இன்று அறிவித்துள்ளது.  

காஷ்மிரில் ஆயுததாரிகளெனச் சந்தேகிக்கப்படுவோர் 26 பேரைக் கொன்ற தாக்குதலில் எல்லை தாண்டிய தொடர்புகளானவை பாதுகாப்பு அமைச்சரவையின் சிறப்புக் கூட்டமொன்றில் கொண்டு வரப்பட்டதாக இந்திய வெளிநாட்டுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஊடகச் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.  

இந்தூஸ் ஆற்று அமைப்பின் தண்ணீரை இரண்டு நாடுகளும் பகிர அனுமதிக்கும் ஆற்று நீர் ஒப்பந்தத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்தியா இடைநிறுத்துவதாக மிஸ்ரி கூறியுள்ளார்.  

இந்தியத் தலைநகர் புது டெல்லியிலுள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிரகத்திலுள்ள பாதுகாப்பு ஆலோசகர்களின் இராஜந்திர பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதுடன், வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளதாக மிஸ்ரி தெரிவித்துள்ளார்.  

இரண்டு நாடுகளுக்குமிடையிலான பிரதான எல்லைச் சோதனைசாவடி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  மூடப்படுமென்றும், சிறப்பு விசாக்களின் கீழ் பாகிஸ்தான் பிரஜைகள் இந்தியாவுக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்களென மிஸ்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .