Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 26, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 25 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவும் உக்ரைனும் கருங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும், இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின்படி,
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடனான சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இந்தப் கலந்துரையாடல்கள் மார்ச் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. இதன் முக்கிய நோக்கம், மூன்று ஆண்டுகளாக நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கூறுகிறது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
54 minute ago