2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ட்ரம்ப் - புடின் கலந்துரையாடல்: மறுக்கும் ரஷ்யா

Freelancer   / 2024 நவம்பர் 12 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதாக  வெளியான செய்தியை மறுத்துள்ள  ரஷ்ய ஜனாதிபதி மாளிகை, இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் கண்டித்துள்ளது.

 ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதிட்டிடன் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடியதாகவும், இந்த உரையாடலின்போது உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.

 புளோரிடாவில் உள்ள லாகோ எஸ்டேட்டில் இருந்து ட்ரம்ப், தொலைபேசியில் தொடர்பு கொண்டு புட்டினிடம் பேசியதாக, அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இந்தச் செய்திகளை மறுத்துள்ள ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இது கற்பனையான ஒன்று. இந்த தகவல் தவறானது” என்று தெரிவித்துள்ளார். 

மேலும்,  டொனால்ட் ட்ரம்பை தொடர்புகொள்வதற்கான உடனடி திட்டங்கள் எதுவும் தங்கள் ஜனாதிபதி புட்டினுக்கு இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X