2025 மார்ச் 15, சனிக்கிழமை

ட்ரம்புக்கு ’ஹமாஸ்’ பதிலடி

Freelancer   / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணய கைதி விவகாரம் குறித்து விடுக்கப்பட்ட  மிரட்டலான கருத்துக்கு,  ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது. 

ட்ரம்பின் எச்சரிக்கைக்கு அந்த அமைப்பின் சிரேஸ்ட செய்தி தொடர்பாளர் சமி அபு ஜூரி அளித்துள்ள பதிலில், “மிரட்டல் விடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை” என கூறியுள்ளார்.

மேலும், “ட்ரம்பின் பேச்சுகள், போர் முடிவுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை கடினம் ஆக்குவது மட்டுமே செய்துள்ளது. இந்த விவகாரத்தில், மிரட்டலுக்கான மொழியில் அர்த்தம் இல்லை. அது நிலைமையை இன்னும் சிக்கலாக்கும்” எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, “போர் நிறுத்த ஒப்பந்தம் என ஒன்று உள்ளது. அதற்கு இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும். இதுவே, கைதிகளை திரும்ப பெறுவதற்கான ஒரே வழியாகும்” என்றும், ட்ரம்புக்கு ஜூரி நினைவூட்டினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .