2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

ட்ரம்பின் வரிவிதிப்பு:நெருக்கடிக்குள் தள்ளப்படும் அமெரிக்க மக்கள்

Freelancer   / 2025 பெப்ரவரி 03 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி விதிக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இதே போல சீனா மற்றும் மெக்சிகோ நாடுகளும் அமெரிக்கா பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தது.

இந்த வர்த்தக போரால் அமெரிக்காவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் குறுகிய காலத்தில் விலை வாசி உயரும் அபாயம் இருப்பதாக, பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனாலும்  ட்ரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

அமெரிக்கா வரிகளுக்கு எதிராக பதிலடி நடவடிக்கையாக கனடா, மெக்சிகோ நாடுகள் செயற்படுகிறது. இதனால் அமெரிக்க மக்கள் பொருளாதார வலியை உணரக்கூடும்.

“அமெரிக்க நலனை பாதுகாக்க இந்த வலிக்கு விலை மதிப்பு அதிகம். நாங்கள் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம். கனடாவில் உற்பத்தியாகும் எந்த பொருளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு ஆற்றல் இருக்கிறது” என, ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் சொந்தமாக அந்த பொருட்களை உருவாக்குவோம். எங்களுக்கு தேவையான அளவை விட அதிகமாக வைத்து இருப்போம்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X