Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 08 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டில் உள்ள ஒரு குடும்ப உறுப்பினருக்கு நிகராக பலரது வீடுகளில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. படுக்கையறை முதல் சமையலறை வரை வீட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்று வரும் அளவுக்கு செல்லம் கொடுத்து பலரும் வளர்த்து வருகிறார்கள்.
இப்படி வளர்க்கப்படும் நாய்கள் சில நேரங்களில் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை கவ்வி கொண்டு போய் விளையாடுவது என தனது சேஷ்டையை செய்து வைத்து விடும்.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்தவர் கிளேட்டன். இவரது மனைவி கேரி லா. இந்த தம்பதி கோல்டன்டூடுல் எனும் இனத்தை சேர்ந்த நாயை செல்லமாக வளர்த்து வருகின்றனர். இதற்கு செசில் என பெயரிட்டுள்ளனர். குடும்பத்தின் ஓர் அங்கமாகவே மாறிபோன செசில், வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கடித்து துப்பியுள்ளது.
இதனால் வீட்டின் அறை முழுவதும் டொலர்கள் கிழிந்து கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கேரி லா தனது கணவரை அதிர்ச்சியுடன் அழைத்தார். ஓடி வந்து பார்த்த கிளேட்டன் ஒரு நிமிடம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். மொத்தம் 4 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கடித்து துப்பியிருந்தது. இதைப்பார்த்து மனவேதனையில் வெதும்பி போயுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
31 minute ago
51 minute ago
58 minute ago