2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

டைனோசர் கால்தடம் கண்டுபிடிப்பு

Freelancer   / 2023 நவம்பர் 26 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் இனம் வாழ்ந்து வந்தன. தற்போது அதன் கால் தடங்கள், எலும்புகள், புதை படிவங்கள் என்பன விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதன் மூலம் டைனோசரின் பல இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந் நிலையில் பிரேசிலில் கால்தடங்கள் மூலம் புதிய டைனோசர் இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரேசிலின் அரராகுவாரா நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கால் தடங்களை ஆய்வு செய்து இது பார்லோவிச்னஸ் ரேபிடஸ் என்று அழைக்கப்படும் புதிய டைனோசர் இனம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இது 60 முதல் 90 சென்டி மீற்றர் (2 முதல் 3 அடி) உயரம் கொண்ட ஒரு சிறிய மாமிச விலங்கு என்றும் இது சுமார் 12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .