Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Freelancer / 2024 ஜூலை 28 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகி விடுவார் என்று முன்பே கணித்த ஜோதிடர் தற்போது டொனால்ட் டிரம்ப் தான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்று கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் முதலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் மோதுவதாக இருந்தது. ஆனால் ஒருசில காரணங்களாக ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகிய நிலையில் தற்போது கமலா ஹாரிஸ் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார்
இந்த நிலையில் ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவார் என்பதை கடந்த சில வாரங்களுக்கு முன்பே கணித்த ஏமி ட்ரிப் என்ற அமெரிக்க ஜோதிடர், தற்போது டொனால்ட் டிரம்ப் அடுத்த ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என்று கணித்துள்ளார்.
அதுமட்டுமின்றி வரும் நாட்களில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் உடல்நலக்குறைவு உள்ளிட்ட சில சிரமங்களை எதிர்கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago