Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 ஜனவரி 08 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
செக் குடியரசு நாட்டில் உள்ள செஸ்கோபுடெஜோவிக் என்ற பகுதியில் பாதிரியார் ஒருவர் எடுத்த மிகப் பெரிய முடிவு அவரது உயிரையே ஆபத்தில் தள்ளியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அ செஸ்கோபுடெஜோவிக் நகரில் மத கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்தக் கூட்டத்தில் குறித்த பாதிரியாரும் கலந்து கொள்ள வேண்டி இருந்தது. இருப்பினும், அவர் சொன்ன நேரத்தில் வரவில்லை. அந்த பாதிரியாருக்காகக் கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் என்று காத்திருந்துள்ளனர். இருப்பினும், நேரம் தான் சென்றதோ தவிர அவர் கூட்டத்திற்கு வரவே இல்லை.
அந்த பாதிரியார் இதுவரை இப்படி கூட்டத்திற்கு வருவதாகச் சொல்லிவிட்டு வராமல் இருந்ததே இல்லை. இதனால் சந்தேகமடைந்த மக்கள் இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த நிலையில் பொலிஸார் அந்த பாதிரியார் வீட்டிற்குச் சென்ற போது பாதிரியார் சுயநினைவு இல்லாத நிலையில் மீட்கப்பட்டார். இரத்த வெள்ளத்துடன் தனது பிறப்புறுப்பை வெட்டி இருந்த நிலையில் பலத்த காயங்களோடு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதையடுத்து உடனடியாக இது குறித்து வைத்தியர்கள் சிகிச்சைகளை முன்னெடுத்த நிலையில் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அடுத்த 10 நாட்களுக்கு அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. நல்ல இருந்த பாதிரியார் ஏன் திடீரென இப்படியொரு முடிவை எடுத்தார் என்பதே அனைவருக்குமான கேள்வியாக இருந்தது. இதற்கான காரணத்தை வைத்தியர்கள் கூறும் போது பலருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சிகரமாகவும் இருந்துள்ளது.
அந்த பாதிரியார் சிலந்திப்பேன், அதாவது உண்ணி கடியால் அந்த மோசமான முடிவை எடுத்து இருக்கலாம் என கூறுகின்றனர்.
ஆங்கிலத்தில் டிக் என்று அழைக்கப்படும் இந்த உன்னி கடிப்பதால் சில நேரம் டிக் மூலம் பரவும் என்செபாலிடிஸ் (TBE) என்ற நோய்ப் பாதிப்பு ஏற்படலாம், இந்த டிக் கடி வெறும் வலியை மட்டும் ஏற்படுத்தாது இது உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தி மனநோய்க்குக் கூட வகுக்குமாம். உரியச் சிகிச்சை பெறாமல் இருந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம் என்று நமக்கே தெரியாத அளவுக்கு மோசமான நிலை ஏற்படும். இது ஏற்படுத்திய உளவியல் மாற்றங்கள் மற்றும் வலியைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த பாதிரியார் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.
அந்த பாதிரியார் உடலைச் சோதனை செய்த போது அவரது உடலில் நரம்பு மண்டலத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. இதன் மூலமாகவே அவருக்கு ஏற்பட்டது இந்த டிபிஇ பாதிப்பை என்பதை வைத்தியர்கள் உறுதி செய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
49 minute ago
56 minute ago