2025 மார்ச் 11, செவ்வாய்க்கிழமை

ஜேர்மனியில் விமான சேவைகள் இரத்து

Freelancer   / 2025 மார்ச் 11 , மு.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனி விமான நிலைய பணியாளர்கள் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் இரத்தாகியுள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
நேற்று முன்தினம் ஹம்பேக் விமான நிலையத்தில் எதிர்பாராத விதமாக இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அது நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பாக விஸ்தரிக்கப்பட்டது.
 
நேற்று காலை புறப்படவிருந்த 143 நீண்டதூர விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
 
சேவைகள் இரத்து செய்யப்பட்ட நிலையில். 5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .