Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mayu / 2024 ஏப்ரல் 22 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலத்தீவின் 20-வது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.
அங்குள்ள 93 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஜனாதிபதி முகமது முய்சுவின் செயல்பாடுகளால் அண்டை நாடான இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் அவரது செல்வாக்கை நிரூபிப்பதற்கான முக்கிய சோதனையாக பார்க்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது.
இதில், ஜனாதிபதி முகம்மது முய்சுவின் கட்சி அதிகப்படியான இடங்களில் வென்றது.
கிட்டதட்ட 66 இடங்களை முய்சு கட்சி வென்றுள்ளது. இது பாராளுமன்றத்தில் 3-இல் 2 பங்காகும். இந்த வெற்றியைத் தொடர்ந்து முய்சு தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தலுக்கு முன்பு முய்சுவின் பிஎன்சி கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்ந்தே வெறும் 8 எம்.பிக்கள் மட்டுமே இருந்தார்கள்.
இதனால் அவரால் விரும்பிய சட்டங்களை எளிதாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது. முகம்மது முய்சு, எதாவது சட்டத்தைக் கொண்டு வர முயன்றால் அதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருந்த பெரும்பான்மை பலத்தை வைத்து முறியடித்து வந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
6 hours ago