2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

ஜன. 27க்கு பிறகு அகதிகள் வருகைக்கு தடை

Freelancer   / 2025 ஜனவரி 23 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில், குடியேற அனுமதிக்கப்பட்ட அகதிகளின் பயணம் இரத்து செய்யப்படுவதாக, ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது..

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். 

அதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பிறகு, அகதிகள் வருகைக்கு தடைவிதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலக்கெடுவுக்கு முன்னதாக அமெரிக்காவுக்குள் நுழைய முறையான அனுமதிப் பெற்ற அகதிகள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அகதிகளின் பயணத்தை ட்ரம்ப் நிர்வாகம் இரத்து செய்துள்ளது. 

அமெரிக்காவுக்கான அகதிகள் வருகை மறு உத்தரவு வரும் வரை இடைநிறுத்தப்படுவதாக, ட்ரம்ப் நிர்வாகம்  அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X