உலகப் பணக்காரர்களின் பட்டியளில் முதல் இடத்தில் உள்ளவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க் (Elon musk) அண்மையில் தனது பிள்ளைகள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
எலான் மஸ்க்கிற்கு மொத்தமாக 9 பிள்ளைகள் உள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த தொழில்முனைவோரான மார்க் கியூபன், எலான் எலான் மஸ்க்கிடம் வித்தியாசமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அப்போது,"வாழ்த்துக்கள். எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்திருக்கும் மஸ்க்,"செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் தேவை" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது பலரையும் திகைப்படைய செய்திருக்கிறது.
முன்னதாக, உலக அளவில் மக்கள்தொகை பெருக்கம் குறைந்துவருவதை மஸ்க் சுட்டிக்காட்டி இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என எச்சரித்திருந்தார். மேலும், தனது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க இருப்பதாகவும், இதற்காக பிரத்யேக திட்டம் அமுலுக்கு வர இருப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.