2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

செக் குடியரசு நாட்டில் இரயில்கள் மோதி விபத்து

Freelancer   / 2024 ஜூன் 06 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

செக் குடியரசு நாட்டில் இரண்டு இரயில்கள் மோதி கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 26 பேர் காயமடைந்தனர்.

படுபைஸ் என்ற இடத்தில் பயணிகள் இரயிலும், சரக்கு இரயிலும் மோதி விபத்து ஏற்பட்டது. பயணிகளின் இரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தில் இருந்து விலகியது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 26 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .