Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 17 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் கென்டகியில் ஏற்பட்ட சூறாவளியில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து, கென்டகி மாகாண ஆளுநர் ஆண்டி பெஷீர் கூறும்போது, “கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணியும் நடந்து வருகிறது” என கூறியுள்ளார்.
மேலும், “சூறாவளி தாக்குதலால், டென்னஸ்ஸீ, கென்டகி மற்றும் விர்ஜீனியா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் ஏற்பட்டு, வாகனங்கள் வெள்ள நீரில் மூழ்கி காணப்படுகின்றன. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. வீடுகள், கட்டிடங்களை வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
“கென்டகி மாகாணத்தில், வரலாறு காணாத வகையில் வெள்ளம் எதிரொலியாக நீர் மட்டம் உயர்ந்து உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது” என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.
தொடர்ந்து மாகாணத்திற்கு அவசரநிலை உத்தரவையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பிறப்பித்துள்ளார். வருகிற நாட்களில் வெள்ளம் தொடரும் என்றும் பெஷீர் எச்சரித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago