2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை

சூடான் உள்நாட்டு போர்: 200 பேர் பலி

Freelancer   / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடானில் 3 நாட்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு முதல், சூடானில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உள்பட 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், சூடானின் தெற்கு பகுதியின் அல்-கடாரிஸ், அல்-கேல்லவட் கிராமத்தில் துணை இராணுவப்படையினர் பதுங்கி இருந்து செயல்படுவதாக அந்த நாட்டின் இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இராணுவத்தினர் அங்கு களம் இறக்கப்பட்டனர். 

தொடர்ந்து ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. 3 நாட்களாக நீடித்து வரும் இந்த தாக்குதலில் தற்போதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X