Mithuna / 2023 டிசெம்பர் 13 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது எனக்கூறி இஸ்ரேல் இராணுவம் காசா மீது பயங்கரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு காசா அடையாளம் தெரியாத வகையில் உருக்குலைத்துள்ளது.
என்றபோதிலும் வீடுகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் ஆகியற்றுடன் சுரங்கங்கள் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் மறைந்து இருந்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி வந்தது. அதற்கு ஏற்ப பல்வேறு வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வந்தது.
ஹமாஸ் அமைப்பினர்கள் இரகசிய சுரங்கத்திற்குள் பிணைக்கைதிகளை வைத்திருக்கலாம். அவர்கள் மறைந்து இருக்கலாம். ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கலாம் என இஸ்ரேல் நம்புகிறது.
இந் நிலையில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கத்திற்குள் கடல் நீரை செலுத்தும் பணியை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை சுரங்கங்களை அழிக்க பயன்படும் என சில அமெரிக்க அதிகாரிகள் கூறியதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
10 minute ago
10 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
10 minute ago
31 minute ago