Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 13 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்த ஃபால்கன் 9 ரொக்கெட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல், இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த ரொக்கெட் தான் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்துவரவுள்ளது.
ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ரொக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் தாமதமாகியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் க்ரூ 10 திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 4.56 மணிக்கு ரொக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்பு உள்ளதாக, நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
நாசா விண்வெளி வீரர்களான ஆனி மெக்லைன், நிகோல் ஏயர்ஸ், ஜப்பான் விண்வெளி துறையை சேர்ந்த தகுயா ஒனிஷி மற்றும் ரோஸ்கோமோஸ் விண்வெளி வீரர் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேறி விட்டனர். மேலும், இந்த ரொக்கெட்டும் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
திட்டமிட்டப்படி வியாழக்கிழமை(13) ஸ்பேக்ஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்வெளிக்கு புறப்பட்டு இருந்தால், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மார்ச் 19ஆம் திகதி பூமிக்கு திரும்பியிருப்பர்.
தற்போது இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இருவரும் பூமிக்கு திரும்புவது மேலும் தாமதமாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago