Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 09, புதன்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 19 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுசிர் பாலாஜி மரண வழக்கில் பொலிஸாருக்கு உதவ தயார் என, 2 மாதத்துக்கு பிறகு ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர் இந்தியரான சுசிர் பாலாஜி (26). 4 ஆண்டுக்குப் பின் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறிய அவர், சாட் ஜிபிடியை உருவாக்கியதில் ஓபன் ஏஐ நிறுவனம் காப்புரிமையை மீறிவிட்டதாக குற்றம்சாட்டி வந்தார்.
இந்த சூழலில் கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி, சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்த தனது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பாலாஜின் தாய் பூர்ணிமா ராவ் இதை ஏற்கவில்லை. தனது மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஓபன் ஏஐ நிறுவனம் மவுனமாக இருந்து வந்தது.
பாலாஜி உயிரிழந்து 2 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், ஓபன் ஏஐ நிறுவனம் முதல் முறையாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
“சுசிர் பாலாஜி எங்கள் குழுவில் மதிப்புமிக்க நபராக திகழ்ந்தார். அவருடைய மரணம் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. அவரது மறைவுக்கு மிகவும் வருந்துகிறோம். பாலாஜி மரண வழக்கில் தேவைப்பட்டால் உதவ தயாராக இருக்கிறோம் என சான் பிரான்சிஸ்கோ பொலிஸாரிடம் தெரிவித்துள்ளோம்.
“இந்த விவகாரத்தை சட்ட அமலாக்கத் துறை சரியாக கையாளும் என்றும் இது தொடர்பான தகவலை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளும் என்றும் நம்புகிறோம். மரியாதை நிமித்தமாக இதுகுறித்து வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை” என, அதில் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
16 minute ago