Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 09, புதன்கிழமை
Editorial / 2025 ஜனவரி 17 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு காலத்தில் உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்தில் இருந்த சீனா, பல்லாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் மூலம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் 2வது மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், குழந்தை பிறப்பு சதவீதம், கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வருகிறது.
குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிகச் செலவு, வேலையின்மை தான், சீனா இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதற்கான காரணம் என மக்கள்தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மக்கள் தொகை குறித்து, சீனாவின் புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீனாவில் கடந்த 2023ம் ஆண்டு மக்கள்தொகை 140 கோடியே 90 இலட்சமாக இருந்தது. இதில் 2024ம் ஆண்டில், 13 இலட்சத்து 90 ஆயிரம் குறைந்துள்ளது.
2023ம் ஆண்டு சீனாவில் 90 இலட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. 2024ம் ஆண்டில் 95 இலட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன. 2023ம் ஆண்டில் ஆயிரம் பேருக்கு 6.39 ஆக இருந்த குழந்தை பிறப்பு சதவீதம் 2024ம் ஆண்டு ஆயிரம் பேருக்கு 6.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2023ம் ஆண்டில், மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 11 இலட்சமாக இருந்தது. 2024ம் ஆண்டில் ஒரு கோடியே 93 இலட்சமாக இருந்தது.
சீனாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 2024ம் ஆண்டில் 31 கோடியாக அதிகரித்து உள்ளது, இது மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதம் ஆகும். இந்த எண்ணிக்கை 2023ம் ஆண்டில் 29 கோடியே 69 இலட்சமாக இருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
32 minute ago
36 minute ago
40 minute ago