2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டம்

Freelancer   / 2025 ஜனவரி 22 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். 

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதி எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார். 

சீனா மீதான கூடுதல் வரிவிதிப்பு தொடர்பான அறிவிப்பை வரும் 1ஆம் திகதி ட்ரம்ப் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். 

இந்த அறிவிப்பும், எதிர்வரும் 1ஆம் திகதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X